Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, June 15, 2010

மாறுதலுக்கு உட்பட்டவை அல்ல !!


இரவில் ஒரு பகலையும்,
பகலில் ஒரு இரவையும் ,
நினைவுகளில் சில நிஜத்தையும்
சில நிஜங்களில் பல நினைவுகளையும்  
உரசிய மனம் சொன்னது,இவை
மாறுதலுக்கு உட்பட்டவை அல்ல என்று!

Wednesday, May 26, 2010

அவன் ஒரு பறவை தான்




கற்பனை செய்துவிட முடியாத
அந்த நொடியில், காதலின்
அட்சய குவளையை நிரப்பி
சிறகுகளற்ற அவன் நினைவுகளோடு
ஏதோவொரு மூலையிலிருந்து ,
எனக்காக கொண்டு வந்து சேர்க்கும்
அவன் ஒரு பறவை தான்!

Tuesday, July 28, 2009

வார்த்தை இல்லா கவிதை !!


வாசிக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
மறந்து போகிறேன்
வார்த்தை இல்லா
கவிதை, எனக்கு
நீ என்று !!


~~~~~~~~~~~~~~~~~~~~~

"கைய பிடி" என்று அதட்டல் போட்டு ,
என் கரம் பற்றி, பிஞ்சுக் குழந்தை,
பாதுகாக்கும் மயிலிறகாய், கூட்ட
நெரிசலில் எனை அழைத்து வரும்
உனை வாசிக்க முயற்சிக்கையில்,
காதல் மேல் காதல் பிறக்கிறது !!

Tuesday, July 21, 2009

உனது காதலில் விழுந்தேன் !!

எழுத நினைக்கையில்
சிறகடித்து பறக்கும்,
உனக்கான வார்த்தைகள்
எழுத துவங்கையில்,
சிறகொடிந்து போவதேன் ?


பல முறை உன்னை சந்தித்தும்,
என் மௌனம் களைய முடியாமல்,
போன போது புரிந்தது,
போர் புரியும் இந்த பூவை,
உன் புன்னைகையால் கொல்கிறாய் என்று !!


உன்னிடம் நேரில் பேசாமல்,
நான் வளர்க்கும் இந்த காதலும்,
எனக்கு சுகம் தான்!
உன் ஒரு ஜோடி கண் பார்த்து,
சொல்ல முடியாத என் காதலை,
இந்த கடிதம் சொல்கிறதே என்று , இருப்பினும்
"அன்புள்ள ...." இந்த ஒரே வார்த்தையில்,
சுருங்கி போகிறதே என் கடிதம்
உனது காதலில் விழுந்தேன் !!!!

Monday, July 20, 2009

மழை காதல்



இவை கவிதைகள் அல்ல , எனது கிறுக்கல்கள் மட்டுமே !!



அடித்து ஓய்ந்த
மழையின் பின்னே,
இனித்து சினுங்கும்
சிறு தூரலாய் எனக்கு,
உனது மௌன மொழிகள்!!

****************************************

இரவு நேரம்,
நெடுந்தூர நடை,
கரம் கோர்த்து நாம்,
கள்ளம், கபடமில்லா,
ஒவ்வொரு உரசலிலும்,
உன்னுள் நனைந்தபடி நான்,
அங்கே, நின்று போனது மழை !!

****************************************

"போதும் நனைந்தது.." என்னும்
உன் அதட்டல் அன்பிற்கு
என்ன தெரியும், நான்
உச்சந்தலை முதல் , உள்ளங்கால் வரை,
உன் காதல் மழையில்
நனைந்து கொண்டே தான்
இருக்கிறேன் என்று !!

******************************************

பி கு : நேத்து பெய்த மழைல கொஞ்ச நேரம் நனைஞ்சிட்டு இருந்தேன்...அதனால வந்த..( ஹச்ச்ச்ச்ச்ச்ச் .. )வினை இது..அட தும்மல் இல்லீங்க..இந்த கிறுக்கல்கள் ....