Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Tuesday, July 21, 2009

வேண்டும் !!!

இனிய காலையில் என்னை கண்டதும்
புன்னகைக்கும் அந்த முகம் வேண்டும் !

எப்போது கண்டாலும் நலமா என்று
விசாரிக்கும் அந்த விழிகள் வேண்டும் !

என் மகிழ்சியில் என்னை விட அதிகமாய்
துள்ளி குத்திக்கும் ஆன்மா வேண்டும் !

நான் விம்மி அழும் போதுமுகம்
புதைக்க அந்த மார்பு வேண்டும் !

நான் துவண்டு விழும் போது என்
தலை கோத ஐ விரல்கள் வேண்டும் !

இவை அத்தனையும் வேண்டும் ,
ஆம் ஒரு ஆணாக !!!

காதல் என்றல்ல , நட்பாக !!
அதற்கு முன்,இதை நட்பாக புரிந்து கொள்ளும்
உலகம் வேண்டும் ! வேண்டும் !!