சொல்லமுடியா ஓர் உணர்வுக்குள்
சிக்கித் தவிக்கிறேன்
இன்பத்திற்கு அது இணையில்லை
‘வலி’ மட்டுமே என்று பெயரிடவிருப்பமில்லை
உணர்ந்து பாருங்கள்
என்றுரைக்கமட்டேன்,
வெட்டவெளியில் உருவமில்லா
கருநிற இருளாய்
ஒவ்வொரு இரவும் என்னை
ஆட்கொள்(ல்)கிறது ...
ரத்தமும் சதையுமாய் மட்டுமே
நான் படைக்கப்பட்டிருக்கிறேன்
எதைத் தேடியே என் பயணம்?
ஒலிக்க முடியா நேரத்தில்
ஆயிரம் வயலின்களின் ஒட்டுமொத்த
இசையும் நரம்பறுத்த
நொடியில் என்னுடன்
படுக்கையைப்
பகிர்ந்துவிடுகிறது
அந்த உணர்வு...
“அது” என உணர்வுக்குப்
பெயரிட்டு
நாளையேனும்
நான் நானாய் வாழ்வேனென
ஒவ்வொரு விடியலிலும்
என்னை நானே பிரசவிக்கிறேன் !!!!
நன்றி : http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3556