Monday, July 20, 2009

ஊர் போய் வந்த கதை !!

நைட்டு ஒரு11 மணி இருக்கும், எங்கப்பா நிதானமா என்ன தட்டி எழுப்பினாரு, எந்திரிடா கோயில் போகணும் கிளம்பலாம்னாறு,
என்னது இப்போவா? ( ஏது பலி , கிலி குடுக்க போரங்களா? இந்த நேரம் கோயில்னுராங்க?, ஊருக்குள்ளயும் சின்ன புள்ளைங்கள பலி குடுத்தா நெனச்சது நடக்கும்னு வேற சொல்லுவாங்களே, சே சே நம்ம அப்பா , அப்படியெல்லாம் செய்யமாட்டாரு !!!)


அப்போ கூட பேகெல்லாம் பேக் பண்ணிவெச்சிஇருந்த எங்க அம்மாவ அப்படியே கைதாங்கலா பிடிச்சிகிட்டு, மாட்டுதாவணி போய் திருச்சி வண்டி ஏறினோம்... அப்போவே மணி நைட்டு 12 இருக்கும்..

அந்த பஸ்காரரருக்கு என்ன அவசரமோ, 3 மணிக்கெல்லாம் திருச்சி கூட்டிட்டு போய்ட்டாரு....

யப்பா, ஏன்பா இப்படி நடுராத்திரி 3 மணிக்கு படுத்துறீங்க?
எனக்கு ஒரே தூக்கம் தூக்கமா வருது.. இப்போ எங்க தான் போறோம் நாம??
ஒரு வேண்டுதல்டா !! நெஜமா சொல்றேங்க சட்டுன்னு தூக்கம் போய்ரிச்சு எனக்கு, ஏது கூட்டிட்டு போய் வேண்டுதல்ன்னு, வாய்ல அலகு ஏதும் குத்திடுவாங்கலோன்னு...
அந்த ப்ராபர்டி மட்டும் இல்லேனா நமுக்கு வேலையே இல்லையே..நம்ம முதலீடே அது தானே.. எதுனாலும் பஸ் ஸ்டாண்ட்லையே பேசி தீத்துக்கனும்னு..முடிவு பண்ணேன்...


நான் :: யப்பா... ஸ்டாப்.. இப்போவே என்னகு மேகி நூடுல்ஸ் வேணும் ..
அப்பா :: என்னது, இப்போவா, சாமி பார்துதுட்டு வரும்போது வாங்கி தரேண்டா ....(ஓகே..நல்ல மூட்ல இருகார் ..ஸ்டார்ட் பண்ணு ஆர்த்தி ...)
நான் :: எல்லாம் ஓகே, என்ன திடீர் பிளான்? என்னகு இப்பவே தெரியனும்..
அப்பா :: இல்லடா உன்மேல பலபேருக்கு கண்ணு, திருஷ்டி ஜாஸ்தி, கோயில் போய் வேண்டிண்டு வரணும்னு சொல்லி இருக்கா அதான்டா.. உன் வளமான எதிர்காலத்துக்கு நல்லதுடா அது..
நான் :: யப்பா, அது மேனுபாக்ச்ரிங் டிபெக்ட், இடைல பிக்ஸ் பண்ண முடியாது.. பெண்டிங் லேடேன்டுன்னு க்ளோஸ் பண்ணுங்கோப்பா....
அப்பா ::!@#$%^&*()_+)*&^%$#@#$$%^&*((__*#$##$$ (ஒழுங்கா இருந்தவர நாம தான் உசுப்பி விட்டுடோமோ ?...)
சமயபுரம் போக பஸ்ல ஏறினோம் .. எங்கம்மா பஸ்ல முன்பக்க வழில ஏறினாங்க, நானும் எங்கப்பாவும் பின்பக்க வழியா ஏறினோம்...
போலாம் ரைட் ... ( அட... கேலபுங்கப்பா .....)


கண்ணா தொறந்து பார்த்தா, டிரைவர் சீட் பின்னாடி நிக்கறேன் நான், பின்னாடி பக்கமா ஏறின மாதிரி இருந்துச்சு... எப்படி , இப்படி ????
டிரைவர் பன்னாடி ரெண்டு சீட் தள்ளி இருந்த சீட் கிட்ட நின்னுட்டு இருந்தேன்,
சன்னல் சீத்ல ஒரு அக்கா, பக்கத்துல அவங்க பாடி கார்டு ( அட..அவங்க புருஷன்...)
எல்லாருமே தூக்க கலகத்துல இருந்தாக ( டிரைவரும் தான்...)
டிரைவர் ஓட்டுற வேகத்துல எங்க அந்த அண்ணன் மடில உக்காந்துருவேனோனு பயந்துட்டே நின்னுட்டு இருந்தேன்.. சும்மா சொல்ல கூடாது.. ( சரி காசு குடுத்துட்டு , சொல்லுங்கன்னு யாராச்சும் மொக்க போட்டீங்க .. சூலாதுயதால சொரிகிடுவேன்...) அந்த அக்கா, அந்த அண்ணன கண்ணாலயே மிரட்டிட்டு இருந்தாங்க.. அடடா வாஸ்த்துவே சரியில்லயே, டிரைவர் பின்னாடி போய் நின்றலாம், நல்லதுன்னு நகந்தா...
"யோவ், நாமாட்டுக்கும் விசில் அடிச்சிட்டே இருக்கேன் வண்டிய நிறுத்தாம போற..நான் பிரேக் அடிச்சே நிக்கல, நீ விசில் அடிச்சா நின்றுமா.. வண்டிய நிறுத்தனும்னா அட்வான்ஸா சொல்லுயா !!!"
ஏது போகுற, போக்க பார்த்தா, அடுத்த ப்ரேக்ல நான், வடிவேலு மாதிரி கண்ணாடிய ஒடச்சி,
" யாருக்குநட்டம், உன்னாக, எனக்காகுன்னு கேட்கபோறேன்னு நெனச்சேன்..."
ஆனா சும்மா சொல்ல கூடாது ...( யார அது..மறுபடியும் காசுங்க்றது..எட்ரா சுலாயுதத்த ....) சூப்பரா கூட்டிட்டு வந்து விட்டாருங்க..குடுத்த காசுக்கு அதிகமாவே ஓட்டினாரு!!
அம்மா தாயி,
உலகத்துல மக்க, மனுசங்க நல்லபடியா இருக்கனும்..
என் டாமேஜர்க்கு நல்ல ப்ராஜெக்ட் கிடைக்கனும்.. ஆனா அத விட நல்ல ப்ராஜெக்ட் எனக்கு கிடைக்கனும்.. ..
மழை, தண்ணி நல்லபடியா பெய்யணும்,
என் மேனேஜர் முன்னாடி நான் ஆன்ஸைட் போகணும்...
கண்டபடி நடக்குற ஆக்சிடெண்ட கொஞ்ச நிறுத்து தாயி..
என் மேனேஜர் நோய், நொடி இல்லாம இருக்கனும், அப்போ தான் நான் கேட்குபோதெல்லாம் எனக்கு லீவ் கெடைக்கும்...
!@#$%
%^&*
)(*&^ (எல்லாமேவா சொல்வாங்க.. மத்ததெல்லாம் சென்சார்டு ..)
நல்லபடியா, சாமிய வேண்டிட்டு ,எல்லாத்தையும் முடிச்சிட்டு.. அங்க, அங்க நின்னு போடோவுக்கு போஸ் குடுத்துட்டு.. ஊரு வந்து சேர்ந்தாச்சு..
சரி....

மேகி தானே , வாங்கி கொடுத்துடாரு.. என்ன போல நல்லவல பெத்தவருங்க.. அவரு ரொம்பவே நல்ல நல்லவருங்க ..

1 comment:

  1. I like your's ஊர் போய் வந்த கதை !!
    meendum meendum padika thondrukirthu ungal kavithaigal.....My sweet sister.have a pleasent day.......
    By,
    Hari.dgl

    ReplyDelete