Tuesday, July 21, 2009

உனது காதலில் விழுந்தேன் !!

எழுத நினைக்கையில்
சிறகடித்து பறக்கும்,
உனக்கான வார்த்தைகள்
எழுத துவங்கையில்,
சிறகொடிந்து போவதேன் ?


பல முறை உன்னை சந்தித்தும்,
என் மௌனம் களைய முடியாமல்,
போன போது புரிந்தது,
போர் புரியும் இந்த பூவை,
உன் புன்னைகையால் கொல்கிறாய் என்று !!


உன்னிடம் நேரில் பேசாமல்,
நான் வளர்க்கும் இந்த காதலும்,
எனக்கு சுகம் தான்!
உன் ஒரு ஜோடி கண் பார்த்து,
சொல்ல முடியாத என் காதலை,
இந்த கடிதம் சொல்கிறதே என்று , இருப்பினும்
"அன்புள்ள ...." இந்த ஒரே வார்த்தையில்,
சுருங்கி போகிறதே என் கடிதம்
உனது காதலில் விழுந்தேன் !!!!

2 comments:

  1. //"அன்புள்ள ...." இந்த ஒரே வார்த்தையில்,
    சுருங்கி போகிறதே என் கடிதம் //
    Good!

    ReplyDelete
  2. நன்றி சதீஷ் !!

    ReplyDelete