Monday, July 27, 2009

நினைவுகள் கொல்லும் தனிமை !!



கூர்காவின் விசில் சத்தம், இரவில்
கேட்டு நான் அலறுவதற்குள்,எனக்கு
முன்னே எழுந்து "ஒண்ணுமில்லடா.." என்று
தடவி கொடுக்கும் என் அம்மாவின் ,
நினைவுகளால் கொல்லப்பட்டும் ,
என் தனிமை !!
******************************************************

"ஐயோ பாவம், எளச்சி போய்ட்டா" என்று
நான் உறங்கையில், தலை கோதியும்,
"எனக்கென்னயா, பொண்ணு ராஜா மாதிரி பாதுக்குறா"
என்று ஊரில் பெருமை பேசும், என் அப்பாவின்
நினைவுகளால் கொல்லப்பட்டும் ,
என் தனிமை !!
********************************************************
"மச்சான் எங்கக்கா வராங்க, திங்கட்கிழமை
காலேஜ்ல பார்க்கலாம்டா " என்று எனக்காக
புன்னகைத்து, இரவு எத்துனை மணி ஆயினும்,
என்னை அழைத்து வர வந்து சேரும்,
என் தம்பியின் நினைவுகளால் கொல்லப்பட்டும்
என் தனிமை !!
******************************************************

எனக்கென ஒரு அறை,
ஒரு தொலைகாட்சி பெட்டி,
ஒரு தொலைபேசி,
அதே போல் ,ஒரு தனிமை !!
*****************************************************
நினைவுகளை பின்னே தள்ளி,
திரும்பி வராத இனிய நாட்களை எண்ணி,
முடங்கி போகிறேன், யாருமில்லா,
வெட்டவெளியில் மூச்சு திணறலாய்,
என் தனிமையோடு !!

2 comments:

  1. //எனக்கென ஒரு அறை,
    ஒரு தொலைகாட்சி பெட்டி,
    ஒரு தொலைபேசி,
    அதே போல் ,ஒரு தனிமை !//

    யதார்த்தம்.

    ரொம்ப நாளைக்கு முன்னாடி தனிமையைப் பத்திக் கொஞ்சம் கிறுக்கி இருக்கேன் - http://veerasundar.blogspot.com/2008/07/blog-post_11.html

    ReplyDelete
  2. நினைவுகளை பின்னே தள்ளி,
    திரும்பி வராத இனிய நாட்களை எண்ணி,
    முடங்கி போகிறேன், யாருமில்லா,
    வெட்டவெளியில் மூச்சு திணறலாய்,
    என் தனிமையோடு !! //

    நல்லா இருக்குங்க..

    ReplyDelete